சனி, 12 நவம்பர், 2022

ஒரு கைதியின் கண்டுபிடிப்பு- Tooth Brush

டூத் பிரஷை கண்டுபிடித்தவர் ஒரு   கைதியான வியாபாரி


நம்மில் பலர் நினைப்போம், நாம் தினசரி உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருளும் எங்கோ ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தது என்று. ஆனால் அது உண்மை அல்ல. ஒரு கண்டுபிடிப்பின் துவக்கம் நம் தேவைகளின் ஆரம்பமாக கூட இருக்கலாம். 

அப்படி ஒரு கைதி தன் தேவைக்காக கண்டு பிடித்த பொருள் தான் நாம் இன்று தினந்தோறும் உபயோக படுத்தும் டூத் பிரஷ். என்ன, ஆச்சிர்யமாக இருக்கிறது அல்லவா?. 

வில்லியம் அட்டிஸ் என்பவர் ஒரு பிரிட்டிஷ் வியாபாரி. அவர் ஒரு கை தகராரினால் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. சிறை காவலர்கள் ஒவ்வோரு கைதியின் அறைகளை காலையில் தட்டி அவர்களை பல் தேய்க்க சொல்வார்கள். ஆனால் கைதிகளுக்கு பல் தேய்ப்பது என்றால் அவ்வளவு பெரிய கஷ்டம். அந்த காலத்தில் பல் தேய்ப்பதற்கு மர குச்சி, உப்பு, கரித்தூல் போன்றவற்றினால் பல்லை சுத்தம் செய்தனர்.  இது சாதாரண மக்களுக்கே கஷ்டமாக இருந்தது. சிறை கைதிகளை சொல்லவே வேண்டாம். பெரும்பாலான சிறை கைதிகள் பல்லை சுத்தம் செய்யவே மாட்டார்கள். சிலர் ஏனோ தானோ வென்று சுத்தம் செய்வார்கள். இதை கவனித்த வில்லியம் அட்டிஸ்க்கு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று தோன்றியது. அன்று இரவு சிறை சாலையில் மாமிச உணவு தயாரித்து இருந்தார்கள். வில்லியம் அட்டிசும் அன்று அந்த மாமிச உணவை ஒரு வெட்டு வெட்டினார். நிறைய எலும்பு துண்டுகள் அவர் சாப்பிடும் மேஜையில் இருந்தது. ஒரு நீளமான எலும்பு துண்டை எடுத்தார். அந்த எலும்பு துண்டை வைத்து யோசிக்கலனார். ஏன் நாம் இந்த எலும்பு துண்டை வைத்து பல் துலக்க கூடாது என்று யோசிக்கலனார. இல்லை இல்லை இந்த எலும்பு துண்டை வெறுமனே பயன்படுத்தினால் பல்லுக்கு பாதிப்பு தான் ஏற்படும். இதை பற்றியே சில நாட்கள் சிந்தித்தார். ஒரு நாள் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. ஏன் நாம் குதிரையின் முடியை இந்த எலும்பின் முனையில் பதித்து, அதனை கொண்டு பல் தேய்க்கலாமே என்று யோசித்தார். உடனே ஒரு காவல் அதிகாரியை தொடர்பு கொண்டு குதிரையின் கழுத்தில் இருக்கும் முடி தனக்கு வேண்டும் என்று கேட்டார். காவலர் எதற்காக உனக்கு தேவை என்று கேட்டார். அதற்கு வில்லியம் அட்டிஸ் பதில் ஏதும் கூரமல், எனக்கு இந்த பொருளை கொண்டு வந்து கொடுத்தாள் தான் சிரையில் இருந்து வெளியில் வரும்போது அவருக்கு தக்க சன்மானம் தருவதாக கூறினார். வில்லியம் அட்டிஸ் ஒரு வியாபாரி அல்லவா! 

சிறை காவலரோ முயற்சி செய்கிறேன் என்று கூறி விடை பெறுகிறார். மறுநாள் வில்லியம் அட்டிஸ் கேட்டபடி சிறை காவலர் குதிரையின் முடியை கொடுத்தார்.  வில்லியம் அட்டிஸ்க்கு பெரும் மகிழ்ச்சி. தான் எண்ணிய படியே அந்த எலும்பு துண்டின் முனையில் குதிரையின் ரோமத்தை செருகி காய வைத்தார். மறு நாள் அந்த குதிரை ரோமங்களை கொண்ட எலும்பு துண்டை வைத்து பற்களை சுத்தம் செய்தார். மற்ற கைதிகள் எல்லாம் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர். இது என்ன புது விதமான ஒரு பொருளை வைத்து இவர் பற்களை சுத்தம் செய்கிராரே என்று கைதிகள் பிரமிப்பாக பார்த்தனர். சில கைதிகள் அவரிடம், இது என்ன என்று விசாரித்தனர். சில கைதிகள் தங்களுக்கும் இது போன்ற ஒரு பொருளை செய்து தருமாறு வில்லியம் அட்டிசிடம் கேட்டனர். வில்லியம் அட்டிசும் பல சிறை கைதிகளுக்கு தான் கண்டுபிடித்த டூத் பிரஷை செய்து கொடுத்தார். உலகின் முதல் டூத் பிரஷ் எலும்பு துண்டினாலும் மற்றும் குதிரை ரோமத்தினாலும் ஆனது என்றால் நம்ப முடியவில்லை அல்லவா. வில்லியம் அட்டிஸ் தான் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அந்த டூத் பிருஷை பெரிய அளவில் தயாரிக்கலானார். 

இங்கிலாந்து மக்களுக்கு வில்லியம் அட்டிசின் இந்த கண்டுபிடிப்பு மிகவும் பிடித்து விட்டது. பெரும்பாலானோர் இந்த புதிய வடிவமைப்பை கொண்ட டூத் பிருஷை உபயோகிக்க ஆரம்பித்தனர். அது வில்லியம் அட்டிசை பெரும் பணக்கராரராக ஆக்கியது.


https://youtu.be/6w4aCY_3OXE





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  PIXXEL: CAPTURING EARTH'S ESSENCE FROM THE SKY In today's world most of the mobile buyers used to buy mobile phones with best pixe...